காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணிகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் சந்தித்திருந்தார்.இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவரங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இது தொடர்பான விண்ணப்பத்திரங்களை விநியோகித்து, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் தகவல்களை சேகரிக்குமாறும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இதற்கமைவான பணிகள் ஜனாதிபதியின் கீழுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால், முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த விவரங்களைத் திரட்டும் பணிகள் அரசாங்க அதிபர்கள் ஊடாக தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்துக்கு தகவல்களை திரட்டும் நோக்கில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.