போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர்!

251 0

தொடரூந்து சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்றது.

இதனையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.தொடரூந்து சேவையை அத்தியவசிய சேவையாக மாற்றி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் பட்சத்தில் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரூந்து சேவையாளர்கள் கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment