பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரதும் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் மா அதிபரால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், தலைமையக பொலிஸ் பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று முதல் பெப்ரவரி 15ம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என, பொலிஸ் மா அதிபரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.