அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கேஸ்கியூட் அதிர்ச்சி தோல்வி

392 0

201608300738114236_US-Open-Tennis-Richard-Gasquet-shock-defeat_SECVPFஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கேஸ்கியூட் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில், இந்திய நேரப்படி நேற்றிரவு தொடங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ராபர்ட்டா வின்சி 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அன்ன லெனா பிரைட்சமை (ஜெர்மனி) விரட்டியடித்து வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 4-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் டவுன்சென்ட்டை போராடி சாய்த்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 84-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் கைல் எட்மன்ட் 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தரவரிசையில் 15-வது இடம் வகிக்கும் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டுக்கு அதிர்ச்சி அளித்தார். முன்னாள் சாம்பியன் மரின் சிலிச் (குரோஷியா) தன்னை எதிர்த்த டுட்ரா சில்வாவை (பிரேசில்) 6-4, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெளியேற்றினார்.