போதையில் ஜீப்பை செலுத்தி இருவர் பலியாக காரணமானவர் கைது

353 0

கடுவலை – பத்தரமுல்லை வீதியின் 8ம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஜீப் ஒன்று வீதியால் சென்று கொண்டிருந்த இருவர் மீது இவ்வாறு மோதியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த போதே, பலியாகியுள்ளனர்.

இதேவேளை, இந்த விபத்தில் கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 38 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், ஜீப் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர் விபத்து நடந்த போது மதுபோதையில் இருந்துள்ளதாக, தெரியவந்துள்ளது என, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a comment