வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு : கொலையா ? விபத்தா?

300 0

குருநாகல் – தம்புள்ளை வீதியில் தலகிரியாகம பகுதியில் பிரதான பாதைக்கு அருகில் கடும் காயங்களுடன் நபரொருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், 25 – 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் எனவும் அவரது தலை, முகம் மற்றும் பாதங்களில் பாரிய காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவர் விபத்துக்குள்ளானாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்ற கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கலேவலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த குறித்த நபரை இதற்கு முன்னர் அப் பகுதியில் பார்த்ததேயில்லை என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment