சட்டவிரோதமாக நாட்டுக்குள் எடுத்துவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை சுங்க அதிகாரிகள் நேற்று (8) மாலை பறிமுதல் செய்தனர்.
மொத்தமாக பதினாறு இலட்சம் சிகரட்டுக்கள் அடங்கிய இந்தத் தொகையின் பெறுமதி சுமார் எட்டுக் கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிகரட்டுகள் டுபாயில் தயாரிக்கப்பட்டவை என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.