பசிபிக் கடலில் பிஜிதீவுகள் அருகே உள்ள டோங்கா தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.
பசிபிக் கடலில் நியூசிலாந்து அருகே பிஜிதீவுகள் உள்ளது. பிஜிதீவின் கிழக்கு திசையில் அமைந்துள்ள டோங்காவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அங்கு 5.7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹிகிபோ நகருக்கு தென்கிழக்கு திசையில் 29 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம், உயிரிழப்பு, காயம் போன்ற எந்தவித தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடவில்லை.
பிஜிதீவு பசிபிக்கடலில் பூகம்ப அபாய பகுதியில் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி இதுபோன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.