கட்டுங்கடங்காத கலிபோர்னியா காட்டுத் தீ: 439 கட்டிடங்கள் எரிந்து நாசம்

267 0

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டியாகோ, சாண்டா அனா உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இப்பகுதியில் 439 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகள் எரிந்து நாசமாயின. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் லாஸ்ஏஞ்சல்ஸ் வட கிழக்கில் உள்ள வெஞ்சுரா கண்ட்ரி பகுதியில் 466 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காட்டுத் தீ எரிகிறது.

சாண்டியாகோ, சாண்டா அனா உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இப்பகுதியில் 439 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

சாண்டியாகோவில் பந்தய குதிரைகள் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பந்தய குதிரைகளின் இனப்பெருக்க மையமும் செயல்படுகிறது. தற்போது எரியும் காட்டுத் தீயில் சிக்கி 15 பந்தய குதிரைகள் கருகி உயிரிழந்தன.

இனப்பெருக்க மையத்தில் உள்ள குதிரைகள் வெளியேற்றப்பட்டன. தீ கட்டுக்கடங்காமல் எரிகிறது. தீணை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment