காணமலாக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

350 0

வலிந்து காணமலாக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில், இன்று மதியம் 12 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து வைத்து காணாமலாக்கப்பட்ட வழக்கு, இன்று யாழ். நீதிமன்றில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் சார்ந்த கட்சியின் ஏற்பாட்டில், லலித், குகன் உள்ளிட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, காணமலாக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

Leave a comment