டெல்லி அழுத்தங்களையடுத்து வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஈபிஆர்எல்எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பில் இணைய அவர் வருகை தந்துள்ள போதும் உள்ளக குழப்பங்களால் அல்லாடும் கூட்டமைப்பு தற்போது வரதராஜப்பெருமாளை கண்டுகொள்ளாதேயிருக்கின்றது. முன்னதாக கடந்த ஆண்டு அவர், இலங்கைக் குடியுரி கொள்ளாதேயிருக்கின்றது.
முன்னதாக கடந்த ஆண்டு அவர், இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆம் திருத்தின் பின்னர் வந்த இணைந்த வடக்கு கிழக்கின் முதலாவது முதலமைச்சராக அவர் பதவி வகித்தார்.
எனினும் 13ஆவது திருத்தத்தை தீர்வாக ஏற்க மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள், சுயாட்சி அதிகாரங்களைக் கேட்டனர். அதனால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து முதலமைச்சர் பதவியைத் துறந்த வரதராஜப்பெருமாள், இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
போர் நிறைவந்த்தையடுத்து இந்தியாவிலிருந்து சுற்றுலா நுழைவிசைவில் யாழ்ப்பாணத்து வருகை தந்து சென்ற வரதராஜப்பெருமாளுக்கு நேற்று இலங்கைக் குடியுரிமை மீள வழங்கப்பட்டது.
மீண்டும் அரசியலில் ஈடுபட ஏதுவாக டெல்லியிலுள்ள தனது வீட்டினை சுமார் 150 கோடி விலைக்கு அவர் விற்பனை செய்துள்ளார்.