புகையிரத தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் புகையிரத சாரதிகள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டத்துடன், நேற்று நள்ளிரவு முதல் புகையிரத காப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட மேலும் சில குழுக்களும் இணைந்து கொண்டுள்ளன.
இது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக லோகோமோடிவ் செயற்பாட்டு பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.
இதேவேளை ஜனாதிபதி அல்லது பிரதமர் உறுதிமொழி ஒன்றை வழங்கும் வரையில் வேலை நிறுத்தத்தை தொடரப் போவாக புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன கூறினார்.
இதுதவிர புகையிரத சீசன் டிக்கட்டுக்களை வைத்திருக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என்று போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே கூறினார்.