சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த கட்ட கடன் தொகையான 251.4 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோக பூர்வ தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
நிதியத்தின் நிறைவேற்று சபை, நிதி வழங்கல் வசதி தொடர்பான உடன்படிக்கையை 3 வது முறையாக ஆராய்ந்த பின்னர் தமது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளது.