போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

285 0

போலி ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றுடன் நபர் ஒருவர் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 09 ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் 31 வயதுடைய ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதுடன், அவர் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a comment