சிறுமிகளை நிர்வாண படம் எடுத்த டாக்டருக்கு 60 ஆண்டு ஜெயில்

369 0

அமெரிக்காவில் உடல் பரிசோதனைக்காக வந்த 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை நிர்வாண படம் எடுத்த டாக்டருக்கு 60 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து மிச்சிகன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் லார்ரி நாசர் (54). டாக்டர் ஆக இருக்கிறார். இவர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் கழகத்தில் டாக்டராக பணிபுரிந்தார்.

அப்போது இவர் தன்னிடம் உடல் பரிசோதனைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து அவர்களை நிர்வாண படம் எடுத்து சித்ரவதை செய்ததாக புகார்கள் வந்தன.

இவர் மீது மிச்சிகன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜானெட் நெப் குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் லார்ரி நாசருக்கு 60 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தார்.

சிறுமிகளை நிர்வாண படம் எடுத்ததில் 3 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தலா 20 ஆண்டுகள் வீதம் தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே அவர் மீது செக்ஸ் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் மீதான தீர்ப்பு அடுத்த மாதம் (ஜனவரியில்) வெளியாகிறது.

Leave a comment