மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மூலவருக்கு ரூ.2¾ கோடி தங்க நாகாபரணம்

302 0

கபாலீசுவரர் கோவிலில் மூலவருக்கு 7½ கிலோ எடையில் தங்க நாகாபரணம் தயாரிக்கப்பட்டு காணிக்கையாக வழங்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் சிறப்பு பூஜைகளின்போது தங்கமுலாம் பூசப்பட்ட நாகாபரணம் மூலவருக்கு அணிவிக்கப்பட்டு வந்தது. கோவில் தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனை குழும துணைத்தலைவர் பி.பிரீத்தா ரெட்டி ஆகியோர் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட நாகாபரணத்தை காணிக்கையாக வழங்க முன்வந்தனர். அதன்படி ரூ.2¾ கோடி மதிப்பில் 7½ கிலோ எடையில் தங்க நாகாபரணம் தயாரிக்கப்பட்டு நேற்று காணிக்கையாக வழங்கப்பட்டது.
காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் இந்த தங்க நாகாபரணம் மூலவருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் நட்ராஜ் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Leave a comment