புயல் சேதத்தை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி செல்ல வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியுள்ளார்.
புயல் சேதத்தை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி செல்ல வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரியில் புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டி மீனவர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் முதல்-அமைச்சர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.முதல்-அமைச்சரின் இச்செயல்பாடுகளில் இருந்தே அவர் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை மக்கள் அறிந்து கொள்ளலாம். ஆகவே, தமிழக முதல்வர் கன்னியாகுமரி விரைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.