நிதி இராஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவின் மகன் பசந்த யாப்பா அபேவர்த்தனவின் திருமணம் நேற்று மாத்தறையில் நடைபெற்ற நிலையில் அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் கலந்துகொண்டிருந்தமை விசேட அம்சமாகவிருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாப்பிள்ளையின் சார்பில் சாட்சிக்கையெழுத்திட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மணப்பெண்ணின் சார்பில் திருமணப்பதிவில் கைச்சாத்திட்டிருந்தார்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அருகில் அமர்ந்தவாறு அளவளவாகிக்கொண்டிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் இதன்போது சில விடயங்களை எடுத்துரைத்ததை காணமுடிந்தது. அத்துடன் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.