மும்முனை போட்டி களத்தில் கொழும்பு மாநகர சபை : ஐ.தே.க.வில் ரோஸி, சு.க.வில் அசாத் சாலி

256 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசிய கட்சியை தவிர ஏனைய கட்சிகள் யாரை நியமிப்பதென்பதில் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுவருவ தாக தெரியவருகின்றது. இதுவரை காலமும் தேர்தலில் இருமுனை போட்டியே இருந்து வந்தது. ஆனால் இம்முறை மும்முனை போட்டி  நிலவுவதால்   போட்டித்தன்மை அதிகரித்துள்ளது.

கொழும்பு மாநகரசபையை பொறுத்த வரை கடந்த 50 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவான கட்சியே ஆட்சி செய்து வந்துள்ளன. அதனால் இம் முறையும் அதன் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையில் மேயர் வேட்பாளராக முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் ரோஸி சேனாநாயக்கவை நியமிக்கப்போவதாக நம்பகரமான வட்டாரங்களின் மூலம் தெரியவருகின்றது. என்றாலும் அது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி உத்தியோக பூர்வமாக  இதுவரை அறிவிப்புக்கள் எதனையும் விடுக்கவில்லை.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமே இதுவரைகாலமும் கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு போட்டியாக இருந்து எதிர்க்கட்சி தலைமை பதவியை பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து செயற்ப டும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போட்டியி டவுள்ளதால் எதிர்க்கட்சி தலைமை பதவி க்கு கடும்போட்டி இடம்பெறலாம் என தெரியவருகின்றது.

அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழு ம்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக யாரை நியமிப்பதென்பதில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேயர்  வேட்பாளராக அசாத் சாலியை நியமிக்கப்போவதாக பரவலாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அஸாத் சாலியிடம் வினவியபோது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக போட்டியிடுமாறு ஜனாதிபதி தன் னிடம் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாத நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் அவர்குறிப்பிட்டார்.

அஸாத் சாலி முன்னர் கொழு ம்பு மாநகரசபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு  பிரதி மேயராக    இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம். பெளசியின் மகன் நெளசர் பெளசியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேயர் வேட்பாளராக நியமிக்கவும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இம்முறை கொழும்பு மாநகர சபையை கைப்பற்றும் நோக்கத்தில் ஸ்ரீல ங்கா பொதுஜன முன்னணி களமிறங்வுள் ளது. அதற்காக அந்த கட்சி  மேயர்வேட் பாளராக போட்டியிடுமாறு அரசியல் அனு பவம் கொண்ட கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயர் ஒமர் காமிலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் வினவியபோது, மேயர் வேட்பாளராக போட் டியிடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் எனக்கு அழைப்பு விடுக்கப்பட் டிருக்கின்றது. என்றாலும் இதுவரைக்கும் அதுதொடர்பாக எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார். அத்துடன் ஒமர்காமில் மேயர் வேட்பாளர்  அழைப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால்  வர்த்தகர் முகம்மதை மேயர் வேட்பாளராக நியமிக்கப் போவதாக தெரியவருவதுடன் மாத் தளை மாநகரசபை முன்னாள் மேயர் ஹில்மி கரீமை நியமிக்கப்போவதாகவும்  ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, கட்சிகள் மேயர் வேட்பாளராக யாரை நியமிப்பதென்று ஆராயும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் யாரை பிரதி மேயராக நியமிப்பதென்ற போட்டி நிலவி வருகின்றது.

குறிப்பாக கொழும்பு மாநகர சபையில் சுமார் 20 வருடங்கள் வரை உறுப்பினராக இருந்துவரும் மொகமட் இக்பாலை நியமி க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்து வருவதாகவும் அத்துடன் பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மேலுமொருவரது பெயரை பிரேரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எதுஎவ்வாறிருப்பினும்  கட்சிகளின் கொழும்பு மாநகரசபையின் மேயர் வேட்பாள ர்கள் யார் என்பது இதுவரை உத்தியோக பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment