அம்பலாந்தோட்டை, புலுல்யாய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளைக்குத் தந்தையான இளைஞர் ஒருவர் பலியானார்.
தச்சுத் தொழிலாளியான இவர், வேலையில் ஈடுபட்டிருந்தபோது உபகரணத்தில் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
உபகரணம் மீது சாய்ந்த நிலையில் அவரைக் கண்ட அவரது சகோதரி, அவரை எழுப்ப முயற்சித்துள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. அப்போதுதான் தனது சகோதரர் மீது மின்சாரம் பாய்ந்துகொண்டிருப்பதை உணர்ந்து கூக்குரலிட்டார்.
அதைக் கேட்ட அயலவர்கள் ஓடிவந்து மின் இணைப்பைத் துண்டித்தனர். எனினும் அதற்கிடையில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தார்.