புகையிரத சாரதிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக புகையிரத சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
புகையிரத உதவியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் நேற்று நள்ளிரவு முதல் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இது தொடர்பான பேச்சுக்குவார்த்தை ஒன்று இன்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது.
குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் தமது வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக புகையிரத சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.