நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (07) செலுத்தியது.
இன்று மதியம் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு.சந்திரகுமார் தலைமையில் சுயேட்சை குழுவினர் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா்.
கரைச்சி, பூநகரி, பளை பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் கருத்து தெரிவித்து அமைப்பின் உறுப்பினா்.சுப்பையா மனோகரன்
இந்த உள்ளுராட்சி தேர்தலில் நாங்கள் சுயேட்சையாக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்றோம், தற்போதுள்ள நிலைமைகளின் படி இந்த உள்ளுராட்சி தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாா் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற எங்களுடைய அமைப்புக்கு அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகிறது.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவா்கள் மக்களின் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தாமையினால் ஏமாற்றமடைந்த மக்களுக்கு அவா்கள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த தேர்தல் மக்களாக முன்வந்து ஒவ்வொரு வட்டாரங்களிலும் தங்களுக்கான வேட்பாளர்களை வழங்கி ஆதரவளித்து நிற்கின்றாா்கள். எனவே கிளிநொச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாா் தலைமையிலான சுயேட்சை குழுவொன்று வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவம் என்பதில் எமக்கு அதிக நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தாா்.
தமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு தமிழ் காங்கிரஸூடனும் நாளை சந்திக்க ஏற்பாடு! தமிழ் அரசுக் கட்சியுடன் ஆசனப் பங்கீடு தொடர்பில் முரண்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக இன்று அதிகாலை அறிவித்த ரெலோ, ஏனைய அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்திவருவதாக அந்தக் கட்சியின் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் நாளை பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ரெலோவின் அரசியல் குழு, யாழ்ப்பாணம் நகர் கொட்டடியில் இன்று மாலை கூடிய ஆராய்ந்தது. அந்தச் சந்திப்பின் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று மாலை என்னுடன் தொலைபேசியில் இரையாடினார். தமிழ் தேசி கூட்டமைப்புக்கு நேற்றைய நாள் கடினமாக அமைந்துவிட்டதாகவும் முரண்பாடுகள் தொடர்பில் கூடிப் பேசுவோம் எனவும் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையுடன் எந்தநேரமும் பேச்சு நடத்த ரெலோ தாயார் என்பதை அவரிடம் நான் கூறினேன். எனினும் எமது முடிவில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கின்றோம். ஈபிஆர்எல்எப் உள்ளிட்ட தரப்புகளுடன் நாம் இன்று பேச்சு நடத்தினோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமாருடனும் நாளை பேச்சு நடத்துகின்றோம். எமது நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். தமிழ் அரசுக் கட்சியும் பேச்சுக்கு அழைத்தால் செல்வோம்” என்று சிறிகாந்தா மேலும் தெரிவித்தார்.