சுலைமானின் கொலை பல மாதங்களாக திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது

313 0

body-700கொழும்பின் பம்பலப்பிட்டிப் பிரதேசத்தில் வசித்துவந்த கோடீஸ்வர செல்வந்தரான மொஹமட் சுலைமானின் கொலை, பலமாதங்களாக திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுலைமானைக் கொலை செய்தவர்கள், கொலைக்கான தடயங்களை அழித்துள்ளதாகவும், இதுவரை இக்கொலை தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 4 தொடக்கம் கொழும்பு 6 வரையும் கொழும்பு 4 தொடக்கம் 3 வரையும், கேகாலை தொடக்கம் மாவனெல்ல வரையும் மற்றும் ஹெம்மாத்தகம வரையும் பொருத்தப்பட்டுள்ள 200 சி.சி.ரி.வி. கமராப் பதிவுகளை ஆய்வு செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலையாளிகளை அடையாளம் காணும் வகையில் இதுவரை சுமார் 75 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுலைமான் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு காவல்துறையினரால் 20 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.