சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட இணைப்பாளர் 5 பேர் நியமனம்

269 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட இணைப்பாளர்கள் 5 பேருக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கிவைக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட இணைப்பாளர்களாக சமிந்த குமார திசாநாயக்க, சட்டத்தரணி உபாலி மொஹொட்டி, என்.டி. தயானந்த நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, கண்டி மாவட்ட இணைப்பாளராக டி.என்.டி. நுகவெல நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைப்பாளராக குணரத்ன மகேந்திர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment