சிவாஜிலிங்கம் இனவாதி என்கிறார் அத்துரலிய தேரர்

325 0

JHUஇலங்கை பிரஜைகள் அனைவரும் இலங்கையில் தமக்கு விரும்பிய எந்தவொரு இடத்திலும் வசிப்பதற்கும்,வாழ்வதற்குமான உரிமை இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சில இனவாதிகளின் இனவாத கருத்துகளுக்கு பதில் தர வேண்டியது அவசியம் இல்லை என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து வரும் இனவாத கருத்துக்கள் தொடர்பாகவே தேரர் இவ்வாறு குறிப்பிடத்தக்கது.

வெளிமாவட்டங்களில் இருந்து வடக்கில் குடியறுபவர்களுக்கு தாம் எதிர்ப்பினை வெளியிடுவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவாஜிலிங்கத்தின் கருத்துக்கள் தொடர்பில் தாம் கலவரம் அடையவில்லை என்றும்,இனவாத கருத்துக்களை விதைக்கும் நபர்களுக்கு நாம் பதில் வழங்க தேவை ஏற்படவில்லை என்றும் அத்துரலிய தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான இனவாதிகளை கவனத்திற் கொள்ளாமல் நாம் எமது கடமைகளை சரிவரச் செய்து கொண்டு செல்வது சிறந்தது என தெரிவித்துள்ள அவர் இந்த நாட்டில் எந்த இடத்திலும் வாழும் உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும் அதுவே நாட்டின் உள்ள சட்டம் என்றும் அத்துரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.