வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளின் மீது விதிக்கப்படுகின்ற வரியினை அதிகரிப்பதற்கு 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது.
அதனடிப்படையில், குறித்த வரியினை திருத்தம் செய்து 2006ம் ஆண்டு 11ம் இலக்க நிதிச்சட்டத்தின் கீழ் குறித்துறைக்கப்பட்டுள்ள 2044/21ம் இலக்க 2017-11-07ம் திகதிய வர்த்தமானி அறிவித்தலினை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உள்நாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளின் மீது வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகள் செலுத்துகின்ற தாக்கத்தினை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை ஈடுபட்டுள்ளது.