விடுதலை புலிகள் ஆயுதங்கள் வவுனியாவில் மீட்பு

464 0

1910773391IMG_1117-720x480வவுனியா – ஓமந்தை பாலமோட்டை பிரதேசத்தில் இருந்து விடுதலை புலிகள் அமைப்புக்குச் சொந்தமான மேலும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா நீதவான் வழங்கிய பணிப்புரைக்கு அமைய நேற்று குறித்த பிரதேசத்தை தோண்டிய போது, இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

ஓமந்த – பாலமோட்டை பிரதேசத்தில் மீளகுடியேறியுள்ள அவர், தமது வீட்டு வளவை துப்பரவு செய்த வேளை, கடந்த 25ஆம் திகதி ஒரு தொகை ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தநிலையில், மேலதிக சோனையின் பொருட்டு வவுனியா நீதவானின் பணிப்புரைக்கு அமைய, நேற்று இரண்டு மண்வெட்டும் இயந்திரங்களை கொண்டு குறித்த இடம் நேற்று தோண்டப்பட்டது.

இதன்போது, எல்.எம்.ஜீ மற்றும் எம்.பீ.எம்.ஜீ ரக ஆயுதங்களின் பகுதிகள் மீட்கப்பட்டன.

இவை யுத்த காலத்தின் போது விடுதலை புலிகளால் கைவிடப்பட்டுச் சென்றவை என்று சந்தேகிக்கப்படுகிறது.