சிறிலங்காவில் எந்தவொரு செய்தி இணையத்தளத்துக்கும் தடை விதிக்கப்படவில்லை என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிறிலங்காவில் சில செய்தி இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், எந்தவொரு இணையத்தளத்தையும் தடை செய்வதில் அர்த்தமில்லை.
அவ்வாறு தடை செய்யப்பட்டாலும் கூட பதிலி (proxy) இணையத்தளங்களின் ஊடாக அவற்றை அணுக முடியும்” என்றும் அவர் கூறினார்.