யாழில் உள்ள சிரம்பரக் காணிகள் தொடர்பாக பல்வேறு மோசடிகள் -நீதிமன்றத்தில் சட்டத்தரணி க.சுகாஸ் சுட்டிக்காட்டு-

356 0

1969133_662531967146406_1010990263_nஇந்தியாவின் சிதம்பர ஆலயத்திற்குச் சொந்தமானதாக யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகளின் உரிமம் தொடர்பாக பெரும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இம் மோசடி நபர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டத்தரணி க.சுகாஸ் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியாலின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீயாயாதிக்க எல்லைக்கு உட்பட்டுக் காணப்படும் இந்தியாவின் சிதம்பரம் ஆலயத்திற்கு உரித்தான காணி தொடர்பான உரிமம் தொடர்பில் வழக்கு ஒன்று நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி க.சுகாஸ் மன்றில் தோன்றி சமர்ப்பனங்களைச் செய்திருந்தார்.
இதன் போது யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகளின் உரிமங்கள் தொடர்பான மேசடிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பவர் ஒவ் அட்ரோனிக் ( தற்காலிக காணி உரித்து ) ஒரு மோசடியாகதாகும்.
அதாவது இந்த பவர் ஒவ் அட்ரோனிக்கினை வழங்கியதாக கூறப்பட்டவர்கள், அந்த உரிமப் பத்திரம் வழங்கப்பட்ட திகதிக்கு முன்பே இறந்துவிட்டதாக நாங்கள் அறிய முடிகின்றது. இறந்தவர் எவ்வாறு வந்து இவர்களுக்கான காணி உரிமப்பத்தரத்தினை கையளித்திருந்தார் என்பது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும். இறந்தவருடைய ஆவி வந்து அவர்களுக்கான காணி உரிமத்தினை வழங்கியதா என்றும் தெரிய வேண்டும்.
இது போன்ற காணிகள் தொடர்பான மோசடிகள் இங்கு பல இடம்பெறுகின்றது. இவை தொடர்பாக விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என்று கூறி இவ்வாறான காணி உரிமம் தொடர்பான மோசடி தொடர்பான மன்றில் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார்.