சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே போட்டியிட அனுமதி

13146 0

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே போட்டியிட அனுமதிகோரி முன்வைக்கப்பட்ட யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ்குணவர்தனவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

அதேநேரம், இந்த கூட்டத்துக்கு முன்னதாக, சிறிலங்கா சுதந்திர கூட்டமைப்பின் மத்திய செயற்கழு கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை அங்கத்துவப் படுத்தும் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திர கட்சியின் வேட்பாளர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில், அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தனித்தனியே போட்டியிடும் வகையிலான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ்குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment