ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் சிறைச்சாலை சுகாதார சேவைகள் மற்றும் மனநோய் தொடர்பிலான சுகாதார சேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும், மனநோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் முறை தொடர்பிலும், சிறைக்கைதிகளுக்கு சிகிச்சை வழங்குதல் மாற்றும் புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் விளக்கங்களை அளித்துள்ளனர்.
இதேவேளை, சுகாதார அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படும் நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அது தொடர்பிலான அறிக்கை ஒன்று தயாரிக்கப்படவிருப்பதாகவும் ஐ.நா.பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்திப்பில் சுகாதார செயலாளர் ஜனக சுகததாச, சுகாதார சேவை பணிப்பாளர் அணில் ஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.