சர்வதேச பயங்கரவாதிகள் இலங்கைக்குள் வர முடியாது – சாகல

293 0

சர்வதேச பயங்கரவாதம் இலங்கைக்குள் வருவதை தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச பொலிஸார் (Interpol) ஏற்பாடு செய்திருந்த, சர்வதேச பயங்கரவாதத்தை தடுப்பது தொடர்பிலான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையின் குடிவரவு குடியகல்வு அமைப்பை சர்வதேச பொலிஸாரின் தரவுத் தளத்துடன் தொடர்புபடுத்தி இருப்பதால், சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச பயங்கரவாதிகள் இலங்கைக்குள் உட்பிரவேசிக்க முடியாது எனவும் அவ்வாறு உட்பிரவேசித்தல் உரிய தரப்பினர் ஊடாக உடனடியாக இலங்கை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment