கைதுகள் தொடர்பில் ஆராய இலங்கை வந்த ஐ.நா.குழுவினர்!

276 0

தன்னிச்சையாக கைது செய்யப்படுவது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று சிறப்பு நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர்.

நேற்று இலங்கை வந்த இந்த குழுவினர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பர்.அந்த காலப்பகுதியில் இவர்கள் சிறைச்சாலைகள், காவல்நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று கைது செய்யப்படுதல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் அவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்றும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த விஜயத்தின் போது பெறப்படும் தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment