மன்னார் பூமலந்தான் வனப்பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் மரங்களை தறித்து வர்த்தகம் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களால் மரம் தறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.