கலேவெல – எனமமல்பொத – ஏழாம் தூண் பிரதேசத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பாம் எண்ணெயை தேங்காய் எண்ணெய்யாக மாற்றும் மோசடியொன்றை காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினர் இன்று சுற்றிவளைத்தனர்.
இதன்போது , ஒன்றாக கலக்கப்பட்டிருந்த 25ஆயிரம் லீற்றர் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வௌி பிரதேசங்களில் இருந்து குறித்த பகுதிக்கு பாம் எண்ணெய் கொண்டுவரப்பட்டு அது தேங்காய் எண்ணெய்யுடன் கலக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கலக்கப்பட்ட 5 ஆயிரம் லீற்றர் தேங்காய் எண்ணெய் கண்டிக்கு அனுப்பப்படவிருந்ததாக சுற்றிவளைப்பில் கலந்து கொண்ட காவற்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு லீற்றர் பாம் எண்ணெய்யை 200 ரூபாவுக்கு வாங்கி அதனை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து 370 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த இடத்தை நடாத்திச் சென்ற வர்த்தகர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.