சீரற்ற காலநிலையினால் சாதாரண தர பரீட்சைக்கு எதுவித தடையுமில்லை

219 0

க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் பரீட்சைக்கு எந்தவித தடைகளும் ஏற்படாது என்றும் பரீட்சார்த்திகள் அனைவருக்கும் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் சேதமடைந்திருந்தால் புதிய அனுமதி அட்டைகள் வழங்கப்படும் எனவும் நாளை (5) நள்ளிரவு முதல் மீட்டல் வகுப்புக்கள் அனைத்தும் தடை செய்யப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a comment