தகுதியுள்ள ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரிய சேவைக்கு

252 0

எதிர்வரும் காலங்களில் தகுதியுள்ள அனைத்து உதவி ஆசிரியர்களும் இலங்கை ஆசிரியர் சேவையின் 03-1 தரத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவ்வாறு இணைத்துக்கொள்ளப்படும் உதவி ஆசிரியர்களை 31,060 ரூபா சம்பளத்துடன் உள்வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆசிரிய உதவி தொழிலை கௌரவமான தொழிலாக மாற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2014ம் ஆண்டில் முறையற்ற விதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட உதவி ஆசிரியர்களுக்காக 6,000 ரூபா மாத்திரமே ஊதியமாக வழங்கப்பட்டதாகவும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தான் முன்னின்று அமைச்சரவை பத்திரம் மூலம் குறித்த சம்பளத்தை 10,000 வரை அதிகரித்ததாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment