இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த 5 சிறிலங்கா மீனவர்களை மீட்டது ஈரானிய எண்ணெய் கப்பல்

897 68

படகு கவிழ்ந்த நிலையில் இந்தியப் பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறிலங்கா மீனவர்கள் ஐந்து பேரை ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாக, இர்னா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

படகு கவிழ்ந்த நிலையில், அதன் மீது ஏறி நின்று உதவி கோரிய ஐந்து மீனவர்களை ஈரானிய எண்ணெய்க் கப்பல் காப்பாற்றியது.

கடும் மழைக்கு மத்தியில் மீனவர்களை மீட்கும் போராட்டம் ஐந்து மணிநேரம் நீடித்ததாக, ஸ்ட்ரீம் என்ற எண்ணெய் தாங்கி கப்பலின் தலைவர் மஹ்மூத் பக்கெஸ்தானி தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் பாதுகாப்பாகவும், பேசக் கூடிய நிலையிலும் இருப்பதாகவும், நாளை மறுநாள் இவர்களை சபஹார் துறைமுகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

இந்த மீனவர்கள் 2-3 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

தெஹ்ரானில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகள், மீட்கப்பட்ட மீனவர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Leave a comment