பலமான ஒரு எதிரணி நிச்சயமாக வேண்டும்! -சுரேஸ் பிரேமச்சந்திரன்

82630 10

“மிக பிழையான அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையை, மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என உள்ளூராட்சிசபைத் தேர்தல் வெற்றியின் ஊடாக காட்டுவதற்கு தமிழரசு கட்சி முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது” என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

“எனவே, அதனை மறுதலிப்பதற்கு பலமான ஒரு எதிரணி நிச்சயமாக வேண்டும். அதனடிப்படையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியிருந்தோம். ஆனால் தற்போது சில பிரச்சினைகள் எழுந்திருக்கின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அந்தப் பிரச்சினை கொள்கை ரீதியான பிரச்சினை அல்ல. தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விரும்பவில்லை.

ஆனால், தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் போட் டியிடுவதனை ஒரு தற்காலிக ஒழுங்காக எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்த சந்தர்ப்பம் இருக்கிறது. அதற்கான காலம் முடிவடைந்துவிடவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்படி தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தனித்து பொது சின்னம் ஒன்றில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் பொது கூட்டணி ஒன்றை உருவாக்கியிருந்தார்கள்.

எனினும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னம் தொடர்பில் எழுந்த பிரச்சினையினால் அந்த கூட் டணி தற்போது உடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மேற்படி செய்திகள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று( 03) கருத்து தெரிவிக்கையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

“உள்ளூராட்சிசபை தேர்தல் என்பது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இல்லை. அது கிராமிய மட்டத்தில் அபிவிருத்திகளை இலக்காக கொண்ட தேர்தலாகும். ஆனால், உள்ளூராட்சிசபை தேர்தல் வெற்றியின் ஊடாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என காட்டுவதற்கு தமிழரசு கட்சி ஆர்வம் காட்டுகிறது.

ஆனால், வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கை என்பது மிக பிழையான ஒன்றாகும். எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகள், மாநகரசபைகள், நகரசபைகளை கைப்பற்றுவதனால் தமிழரசு கட்சி மேற்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு பிழையான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு பொதுவான ஒரு எதிரணி தேவை என்பது உணரப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் தேசிய கொள்கைகளை ஒத்து கொண்டு, கிராமிய அபிவிருத்திகளையும் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்ச்சியாக பேச்சு நடத்தப்பட்டு பலமான பொது எதிரணி ஒன்றை உருவாக்க நினைத்தோம்.

அதில் சமூகத்தில் உள்ள பல அமைப்புக்களையும் இணைத்து செயற்பட தீர்மானித்திருந்தோம். அந்தவகையில் பலராலும் ஆதரிக்கப்பட்ட, தந்தை செல்வாவாலும் ஆதரிக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மா னிக்கப்பட்டது.

ஆனால் இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் சகல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று தீர்மானிக்கலாம் எனவும் தீர்மானித்திருந்தோம்.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரித்துள்ளதுடன், அதற்காக பல்வேறு காரணங்களையும் கூறியிருக்கின்றது.

எனவே, எமக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை. அதேபோல் நாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளது. எனவே என்ன வகையில் தொடர்ந்து இணைந்து செயற்படலாம் என தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடாத்துவோம் என்றார்.

 

There are 10 comments

  1. Pingback: Homepage

  2. Pingback: Read more

  3. Pingback: Garage Door Opener in Battle Ground, WA

  4. Pingback: Cannabis

  5. Pingback: Plinko

  6. Pingback: 123win88

  7. Pingback: roay91

  8. Pingback: Mostbet

  9. Pingback: เพิ่มยอดไลค์แฟนเพจ Facebook

  10. Pingback: เพิ่มยอดวิว

Leave a comment