அரச பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது!

325 0

இலங்கை போக்­கு­வ­ரத்­துச் சபைக்­குச் சொந்­த­மான பேருந்து மீது கல்­வீ­சித் தாக்­கு­தல் நடத்­திய குற்­றச்­சாட்­டில் 5 பேரைக் கைது செய்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கண்டி நோக்­கிப் பய­ணித்த பேருந்தின் மீது கன­க­ரா­யன் குளம் பகு­தி­யில் வைத்து நேற்­று­முன்­தி­னம் கல் வீச்­சுத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்கள் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment