ஜிம்பாப்வே நாட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிம்பாப்வே நாட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிம்பாப்வே நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஷோலுட்ஷோ மாவட்டத்தில் லாரி ஒன்றில் 69-க்கு மேற்பட்ட பயணிகள் நேற்று பயணம் செய்து கொண்டிருந்தனர்.
சிறிது தூரம் சென்றதும் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி கவிழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயம் அடைந்த 21 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சம்பவ இடத்தில் 15 பேரும், மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.