பொல்கஹவெல – பனலிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் நேற்று இரவு தீ பரவியதில் வீட்டில் இருந்து 5 பேர் தீக் காயங்களுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பொல்கஹவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் இரு பெண்கள், ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை ஒன்றும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.