நுளம்புகளால் உருவாகும் ஒரு வகை டெங்கு நோய்க்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதலாவது ஊசி மருந்துக்கு பிலிப்பைன்ஸ் தடைவிதித்துள்ளது.
நேற்று முதல் பிலிப்பைன்ஸ் இந்த தடையை விதித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஊசி மருந்தின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து பிரபல ஆய்வு நிறுவனம் எச்சரித்ததை தொடர்ந்து இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதற் தடவையாக டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு குறித்த ஊசி மருந்தை ஏற்றுவதன் மூலம் நோயாளரின் நிலை மேலும் பலவீனம் அடையும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஊசி மருந்தை பரந்த அளவில் பெற்றுக் கொடுத்த உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் பிலிப்பைன்ஸில் ஏழு லட்சம் பேருக்கு குறித்த ஊசிமருந்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.