இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடக் கூடாது!-ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க

419 0

தனிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இராணுவத்தினர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என, இராணுவத் தளபதி லுத்தினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தினரின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மக்களுடன் சுமூகமான உறவைப் பேணுதல், இனங்களுக்கு இடையில், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையிலான செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குதல், என்பவற்றை தவிர்த்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இராணுவத்தினர் தவிர்க்க வேண்டும் என, மகேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment