உந்துவப் பௌர்ணமி தின நிகழ்ச்சிகளில் மைத்ரிபால பங்கேற்பு…!

314 0

சதஹம் யாத்ரா சமய உரைத் தொடரின் உந்துவப் பௌர்ணமி தின நிகழ்ச்சிகள் இன்று முற்பகல் பம்பலபிட்டிய ஸ்ரீ வஜிராராம விகாரையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

விகாரைக்கு சென்ற ஜனாதிபதி சமயக் கிரியைகளில் பங்குபற்றியதன் பின்னர் விகாராதிபதி அமரபுர தர்மரக்ஷித மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரரை சந்தித்து பூஜைப் பொருட்களை அன்பளிப்பு செய்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீ வஜிராராம தஹம் பாடசாலையின் சங்கைக்குரிய மீகொட சுகித தேரரினால் சமய உரை நிகழ்த்தப்பட்டது. ஜனாதிபதியும் இந்த சமய உரையை செவிமடுத்தார்.

விகாரையில் புதிதாக நிர்மாணிக்கபட்டுள்ள சூரிய சக்தி மின் நிலையத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.

இந்த புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்களுடன் ஜனாதிபதி சுமுகமாக கலந்துரையாடினார்.

Leave a comment