தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் நாளை

286 0

சீரற்ற காலநிலையின் காரணமாக 4 மாகாண பாடசாலைகளில் தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் நாளை நடைபெறவுள்ளன.

அடைமழை மற்றும் கடும் காற்று காரணமாக கடந்த வியாழக்கிழமை மேல், மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நான்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கு கடந்த ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டது.

அன்றைய தினம் நடைபெறவிருந்த மூன்றாம் தவணை பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை இடம்பெறும். திங்கட்கிழமைக்கான நேரசூசி செவ்வாய்க்கிழமை தொடக்கம் அமுலாக்கப்படும் என மேல்மாகாண தமிழ்க்கல்விப் பணிப்பாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

மத்திய மாகாண பாடசாலைகளிலும் வியாழக்கிழமைக்குரிய பரீட்சைகள் திங்கட்கிழமைக்கு பின்போடப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Leave a comment