ஆசன பங்­கீடு குறித்து ஐ.தே.கவுடன் இறுதிச் சுற்றுப்பேச்சு இன்று.!

10100 0

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் தொடர்பில் ஐக்­கிய தேசிய முன்­னணி கட்சி தலை­வர்கள் இன்று  மாலை அலரி மாளி­கையில் சந்­தித்து இறுதிச் சுற்று பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­ட­வுள்­ளார்கள் என முற்­போக்கு கூட்­டணி மற்றும் ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­ச­ரு­மான  மனோ கணேசன் கூறி­யுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

தமிழ் முற்­போக்கு கூட்­டணி போட்­டி­யி­ட­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்­பாக இது­வ­ரையில் நுவ­ரெ­லியா மாவட்ட உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்­பி­லேயே  ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் ஆசன பங்­கீட்டு பேச்­சு­களில் ஏறக்­கு­றைய முடி­வுகள் எட்­டப்­பட்­டுள்­ளன.  ஏனைய சபை­களை பொறுத்­த­வ­ரையில் பேச்­சுகள் முடிவு பெற­வில்லை.

அதே­வேளை,  உள்­ளூ­ராட்சி சபை­களை, நமது வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை அடிப்­ப­டையில், மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் சபைகள், குறை­வாக வாழும் சபைகள், கணி­ச­மாக வாழும் சபைகள் என நாம் தரம் பிரித்­துள்ளோம்.  நமது மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் சபைகள் மற்றும் குறை­வாக வாழும் சபை­களை பொறுத்­த­வ­ரையில் ஐ.தே.கவுடன் கூட்­டி­ணைந்து ஐக்­கிய தேசிய முன்­னணி என்ற அடிப்­ப­டையில் போட்­டி­யி­டு­வதில் சிக்கல் கிடை­யாது.

ஆனால், நமது வாக்­கா­ளர்கள் கணி­ச­மாக வாழும் சபை­களைப் பொறுத்­த­வ­ரையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யாக போட்­டி­யி­டு­வதில் நமக்கு பாதிப்பு ஏற்­படும் என்ற கருத்து நில­வு­கி­றது. ஏனென்றால் புதிய கலப்பு தேர்தல் முறையில் வட்­டா­ரங்­களில் மட்­டு­மல்­லாமல், பட்­டி­ய­லிலும் உறுப்­பி­னர்­களை பெற­வேண்­டி­யுள்­ளது. ஆகவே நமது வாக்­கா­ளர்கள் கணி­ச­மாக வாழும் சபை­களில் அனைத்து வட்­டா­ரங்­க­ளிலும் நாம் போட்­டி­யி­டு­வதன் மூலமே நாம் உரிய இலக்கை அடைய முடியும்.  இதனால்  சில சபை­களில் சேர்ந்து ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யா­கவும், சில சபை­களில் தனித்து முற்­போக்கு கூட்­ட­ணி­யா­கவும் போட்­டி­யிட வேண்டும் என்­ப­துவே தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின்  நிலைப்­பா­டாக இருக்­கின்­றது.

எவ்­வா­றா­யினும், ஞாயிற்றுக் கிழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமையிலான ஐ.தே.க குழுவுடன் பேச்சுகள் நடத்திய பிறகு, ஐந்தாம் திகதி கொழும்பில் கூடும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுவில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.என்றார் .

Leave a comment