ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைக்கு எதிரான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் மாநாடு இலங்கையில் நாளை நடைபெறவுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு பிராந்திய அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெறும் செயலமர்வில் முக்கிய உரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தவுள்ளார்.
நிதி மற்றும் ஊடக அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த மாநாட்டில் அமைச்சர் மங்கள சமரவீர, யுனெஸ்கோ அமைப்பின் ஊடகதுறையின் மேம்பாட்டு அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் ஹை பேகர் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
பிராந்திய ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் ஆசிய பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைக்கு எதிராக நீதிமன்றம், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக பணிகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு எதிராக பதிவாகியுள்ள வன்முறை செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தீர்வை அடையாளம் காண்பதன் மூலம் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைக்கு எதிரான குற்றத்திற்காக தண்டனை வழங்காது போராட்டத்தை வலுப்படுத்தல் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான கட்டமைப்பை விரிவுபடுத்தல் ஆகியன இச் செயலமர்வின் நோக்கமாகும். இந்த மகாநாட்டில் சர்வதேச ரீதியில் 50 பேரும் ஊடக நிறுவனங்களை சேர்ந்த முக்கிய உள்ளுர் முக்கியஸ்தர்களும் அடங்கலாக 150 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.