சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள இழப்பீட்டின் ஒரு பகுதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் அனைத்து மாவட்ட செயலகங்களும், பிரதேச செயலகங்களும் இன்று மற்றும் நாளையும் திறக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி இதுவரை அறியவந்துள்ள சேதமடைந்துள்ள வீடுகள் தொடர்பில் இழப்பிட்டு தொகையில், முற்பணம் பிரதேச செயகங்கள் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெற்று கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எஞ்சிய இழப்பீடு விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கள உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலாளர் அல்லது உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு 1902 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பாதிப்பு தொடர்பில் அறிவிக்க முடியும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.