கிளிநொச்சியில் புத்த விகாரை அமைக்கப்படுவதை நிறுத்துங்கள் ஜனாதிபதிக்கு வடமாகாண சபை கடிதம்

394 0

northern-provincial-councilகிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலயக் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்படும் புத்தவிகாரையின் நிர்மானப் பணிகள் உடனடியாகா நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வடமாகாண சபை கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது.
இக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
முதலாவது வடக்கு மாகாணசபையின் 2016.08.16 ஆம் திகதி 58 ஆவது அமர்வில் :போது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானம் தங்கள் மேலான தகவலுக்கும் நடவடிக்கைக்குமாக கீழே தரப்படுகின்றது.
குpளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் கோவில் உரித்தான காணி வளாகத்தில் புத்த கோவில் நிர்மானிக்கப்படுவது தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தத் தீர்மானிக்கப்ப்டதது.
கோவிலுக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமித்து புத்தவிகாரையினை நிர்மானிக்கின்றார்கள்.
இது ஒரு வெளிப்படையான நில ஆக்கிரமிப்பாகும் அத்துடன் மத நல்லிணக்கம், மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு முற்றிலும் ஏதிரானதாகும்.
ஆகவே இதில் தலையிட்டு நிர்மான வேலைகளை நிறுத்தி ஆலய நிர்வாக சபையிடம் நிலத்தினை மீள கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம் என்றுள்ளது.